ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை
ஈரானில்(Iran) ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் இந்தியர்களை(Indians) அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
சிவில் மற்றும் இராணுவ போக்குவரத்து விமானங்களைப் பயன்படுத்தி இந்தியர்களை மீண்டும் அழைத்து வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், மதிப்பீடுகளின்படி மாணவர்கள் உட்பட 10,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தற்போது ஈரானில் வசித்து வருகின்றனர்.
மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைத்து இந்தியர்களும் கிடைக்கக்கூடிய போக்குவரத்து மூலம் ஈரானை விட்டு வெளியேறுமாறு தெஹ்ரானில்(Tehran) உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், அனைத்து இந்திய குடிமக்களும் இந்திய வம்சாவளியினரும் உரிய எச்சரிக்கையுடன் இருக்கவும் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் தவிர்க்கவும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




