ஐரோப்பா

சுவிஸில் இருந்து 49 சிறப்பு விமானங்களில் 339 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தல்

சுவிட்ஸர்லாந்தில் இருந்து 49 சிறப்பு விமானங்களில் 339 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவை டப்ளின் எனப்படும் புகலிட ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக, சுவிஸ்செய்தித்தாள்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானங்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பிற்கமைய, விமானங்களுக்கான ஒட்டுமொத்த செலவுகள் குறைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒரு சிறப்பு விமானத்தில் ஒரு நபருக்கான சராசரி செலவு 13,000 சுவிஸ் பிராங்க் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஆண்டு, இந்த செலவு 7,300 சுவிஸ் பிராங்காக குறைந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் தென் அமெரிக்காவிற்கு சிறப்பு விமானங்களில் நாடு கடத்தப்பட்டுள்ளது.

அல்ஜீரியா மற்றும் ஈராக்கிற்கான முதல் விமானங்கள் உட்பட, கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 24 விமானங்களில் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்