கிரேக்கத்தில் குப்பையில் இருந்து மீட்கப்பட்ட அலெக்சாண்டர் காலத்து சிலை!
கிரேக்க நகரமான தெசலோனிகி அருகே குப்பைப் பையில் 2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக நம்பப்படும் ஒரு பெண்ணின் பளிங்கு சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு வெளியே உள்ள நியோய் எபிவேட்ஸில் குப்பைத் தொட்டியின் அருகே தலையில்லாத சிலையை கண்டுப்பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட மதிப்பீட்டைத் தொடர்ந்து, நிபுணர்கள், இந்த துண்டு ஹெலனிஸ்டிக் சகாப்தத்தைச் சேர்ந்தது என்று தீர்மானித்ததாக போலீசார் தெரிவித்தனர், இது கிமு 320 மற்றும் 30 க்கு இடைப்பட்ட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது மகா அலெக்சாண்டரின் வெற்றிகளைத் தொடர்ந்து கலை மற்றும் கலாச்சாரத்தின் செழிப்பை பிரதிபளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சிலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மேலும் ஆய்வுக்காக அனுப்பப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளு்ளது.