குவாத்தமாலாவில் (Guatemala) அவசரகால நிலை பிரகடனம்!
குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள இரண்டு நகராட்சிகளில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சோலோலா (Solola) துறையிலுள்ள நஹுவாலா (Nahuala) மற்றும் சாண்டா கேடரினா (Santa Catarina) இக்ஸ்டாஹுகான் (Ixtahuacan) ஆகிய நகராட்சிகளில் இந்த அவசரகாலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுதமேந்திய நபர்கள் ஒரு இராணுவச் சாவடியையும் ஒரு காவல் நிலையத்தையும் தாக்கி, சாலைகளைத் துண்டித்து, பேருந்துகளைக் கடத்திச் சென்றதன் விளைவாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் கும்பல்கள் இப்பகுதியைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினரை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டை பாதுகாக்க இந்த அவசரகாலநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந் நடவடிக்கை 15 நாட்களுக்கு தொடரும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதல்களின் விளைவாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




