கலிபோர்னியாவின் 06 மாவட்டங்களில் அவசரகால நிலை பிறப்பிப்பு!
கலிபோர்னியாவில் (California) வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக பல பகுதிகளில் கடும் மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க தேசிய வானிலை சேவை, “உயிருக்கு ஆபத்தான வளிமண்டல நதி நிலைமைகள்” தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் (Gavin Newsom) ஆறு மாவட்டங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பாதிக்கப்படக்கூடிய வீடுகளுக்கு 130 வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக லொஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) கவுண்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





