வெனிசுலா தாக்குதல்-சர்வதேச சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தார் ஸ்டாமர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெனிசுலா மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறியதா என்பது குறித்து, பிரித்தானிய பிரதமர்ஸ்டார்மர் (Sir Keir Starmer) கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியில், அமெரிக்க தாக்குதலை அவர் நேரடியாக கண்டிக்கவில்லை என்பதுடன் முழு தகவல்கள் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தன்னை சர்வதேச சட்டத்தின் நீண்டகால ஆதரவாளராகவே பார்க்கிறேன் என்றும் அவர் கூறினார்.
சனிக்கிழமை நடைபெற்ற வெனிசுலா தாக்குதலில் பிரித்தானியா (UK) ஈடுபடவில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro) கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ட்ரம்புடன் கலந்துரையாடவில்லை என்றும் பிரதமர் ஸ்டாமர்
மேலும் கூறியுள்ளார்.





