வெனிசுலாவில் ஜனநாயக மாற்றம் வேண்டும் – அமெரிக்கா பக்கமா ஸ்டார்மர்?
வெனிசுலாவில் “ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை காண விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் [Keir Starmer] தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“வெனிசுலாவில் நிகழ்ந்தவை மிகவும் முக்கியமானவை. ஜனாதிபதி சட்டவிரோதமாக செயற்படுவதால், நாட்டிற்கு ஜனநாயக மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை நாங்கள் நீண்ட காலமாக ஆதரித்து வருகிறோம்.
சர்வதேச சட்டம் நாட்டின் எதிர்காலத்திற்கு நங்கூராக இருக்க வேண்டும். அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு ஏற்பவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும்.
இது மிகவும் சிக்கலான சூழ்நிலை. மிக முக்கியமானது நிலைத்தன்மையும், ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றமும்” என வலியுறுத்தினார்.





