இலங்கையில் செயல்படும் ஸ்டார்லிங்க்’ இணைய சேவை! மஸ்க் அறிவிப்பு!

இலங்கையில் ஸ்டார்லிங்க்’ இணைய சேவை தற்போது செயல்பட ஆரம்பமாகியுள்ளதாக தொழிலதிபர் எலோன் மஸ்க் தனது “X” கணக்கில் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14, 2024 அன்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” உரிமத்தை வழங்கியது.
இந்த இணைய சேவை இலங்கையில் தற்போதுள்ள ஃபைபர் தொழில்நுட்ப இணைய சேவையை விட பல மடங்கு வேகமாக இருக்கும் என்றும், உலகில் எங்கிருந்தும் இந்த சேவையை அணுக உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)