இலங்கை

இலங்கையில் Starlink இணைய சேவை – முன்பதிவுகள் ஆரம்பம்

இலங்கையில் எலோன் மஸ்க்கின் “Starlink” சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள இலங்கையர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்படி Starlink இணையத்தளத்திற்குச் சென்று முன்கூட்டிய விண்ணப்பம் செய்யலாம். பொதுமக்கள் முழுமையாகத் திரும்பப்பெறக்கூடிய 9 அமெரிக்க டொலர் வைப்புத்தொகையைச் செலுத்தி Starlink ஐ முன்பதிவு செய்ய முடியும்.

இந்த இணைய சேவையை இணைப்பதன் மூலம் நாட்டில் இணையதள வசதிகள் குறைவாக உள்ள பகுதிகள் எந்த பிரச்சினையும் இன்றி இணையதள வசதிகளை பெற முடியும் என கூறப்படுகிறது.

Starlink 2024 ஆம் ஆண்டு இலங்கையில் சேவையை ஆரம்பிக்க இலக்கு வைத்துள்ளதுடன் அதற்கான ஒழுங்குமுறை அனுமதி நிலுவையில் உள்ளது.

ஒவ்வொரு கவரேஜ் பகுதியிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் விண்ணப்பம் நிறைவேற்றப்படும்.

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தோனேசியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் பங்குபற்றிய போது ஜனாதிபதிக்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

அங்கு “Starlink” செயற்திட்டத்தை இலங்கையில் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கையில் அவ்வாறானதொரு திட்டத்தை ஆரம்பிக்க தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதன்படி, இலங்கையில் “ஸ்டார்லிங்க்” திட்டத்தை தொடங்குவதற்காக எலோன் மஸ்க் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

தற்போது உலகின் 99 நாடுகளில் ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

(Visited 20 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!