பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ்ஷையரில்(Cambridgeshire) ரயிலில் கத்திக்குத்து தாக்குதல்
லண்டனில் இருந்து கேம்பிரிட்ஜ்ஷையரின்(Cambridgeshire) ஹண்டிங்டனுக்குச்(Huntingdon) சென்ற LNER ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று நடந்துள்ளதாக பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது
தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எத்தனை பேர் கத்தியால் குத்தப்பட்டனர் மற்றும் காயங்கள் குறித்த எவ்வித விவரங்களையும் பிரிட்டிஷ் போக்குவரத்து காவல்துறை வெளியிடவில்லை.
இந்நிலையில், சம்பவம் காரணமாக ஹண்டிங்டன் நிலையத்தைச் சுற்றி அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டுள்ளதாக லண்டன் வடகிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், நாள் இறுதி வரை இடையூறு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 7 times, 2 visits today)





