செய்தி

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு; ஒருவரின் நிலை கவலைக்கிடம்!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் மக்களைக் கொலை செய்யும் நோக்கில் கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் திங்கட்கிழமை (நவம்பர் 18) இரவு கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 18ஆம் திகதி காலை நடந்த இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் பலத்த காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அப்பகுதி மேயரும் காவல்துறையினரும் தெரிவித்தனர்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுதமான ரத்தம் தோய்ந்த சமையலறையில் பயன்படுத்தப்படும் பெரிய கத்தியின் புகைப்படத்தைக் காவல்துறையினர் வெளியிட்டனர்.

கத்திக்குத்துச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர், மூவரை ஏன் கத்தியால் குத்தினார், அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் குறித்த எந்தவொரு விவரத்தையும் காவல்துறை தெரிவிக்கவில்லை.

குற்றவழக்குகளில் தொடர்புடையை 51 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவரிடமிருந்து இரண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்திகள் கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 51 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி