இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல்: தாக்குதல்தாரியை சுட்டுக்கொன்ற பொலிஸார்

இஸ்ரேலிய நகரமான ஹடேராவில் புதன்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.
லெபனானில் ஹிஸ்புல்லாவுடனான மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில், காஸாவில் ஒரு வருடத்திற்கு முன்னர் ஹமாஸ் தாக்குதலைத் தூண்டியதில் இருந்து இஸ்ரேல் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் உள்ளது.
(Visited 21 times, 1 visits today)