இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து: வெளியான முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் இருந்து இன்றைய தினம் இடம்பெறவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் 7 சேவைகள் தாமதாகியுள்ளன என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (பிப்ரவரி 27) திட்டமிடப்பட்ட மூன்று ஸ்ரீலங்கன் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (26) மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே உறுதிப்படுத்தினார், மேலும் ரத்து செய்யப்பட்டதாக பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டது.

மேலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பேச்சாளர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுகளே தாமதத்திற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.

UL 364, UL 161, UL 314, UL 121, UL 189, UL 880 மற்றும் UL 470 ஆகியவை அந்தந்த விமானக் குறியீடுகளால் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட விமானங்களில் அடங்கும்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!