நேபாளத்திற்கான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் – ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு 10 மணி முதல் அந்நாட்டு ராணுவமும் பிற பாதுகாப்புப் படையினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதிகரித்து வரும் வன்முறையைக் கட்டுப்படுத்த இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)