இலங்கை

நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவனம்!

விமானி அறை நெறிமுறைகளை மீறியதற்காக விமானிக்கு எதிராக விமான நிறுவனம் விரைவான நடவடிக்கை எடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட விமானப் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரமதிப்பீட்டு நிறுவனமான AirlineRatings.com, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 7 நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று (22.10)  அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில், சிட்னியில் இருந்து கொழும்புக்கு 10 மணி நேர விமானப் பயணத்தின் போது, ​​தனது பெண் துணை விமானியை கேப்டன் ஒருவர் வெளியே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து AirlineRatings.com, விமான நிறுவனத்தின் பாதுகாப்பு மதிப்பீட்டை ஏழிலிருந்து ஆறு நட்சத்திரங்களாகக் குறைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த விமானிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததன் விளைவாக நட்சத்திர அந்தஸ்தை மீட்டெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

(Visited 34 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!