இலங்கை

திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வரலக்ஷ்மி பூஜை

ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கும், ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்பாளுக்கும் நிகழும் சோபகிருது வருடம் ஆவனி மாதம் 8ம் நாள் எதிர்வரும் (25/08/2023) வெள்ளிக்கிழமை ஆலய வேதாகமமாமணி ஆதீன கர்த்தா பிரம்மஸ்ரீ.சோ.இரவிச்சந்திரக் குருக்கள் தலைமையில் வரலக்ஷ்மி பூஜை விஞ்ஞாபனம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.

ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்பாளுக்கு வரலக்ஷ்மி பூஜை வழிபாடும், தொடர்ந்து கன்னிப் பெண்கள், சுமங்கலிகள், தீப பூஜையும் நடாத்த திருவருள் கூடியுள்ளது.

சோபகிருது வருடம் ஆவனி மாதம் 8ம் நாள் (25/08/2023) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு ஸ்நபனாபிஷேகம் ஆரம்பமாகி 7.00 மணிக்கு பூஜையும், பகல் 9.00 மணிக்கு ஸ்ரீ வரலக்ஷ்மி அம்பாளுக்கு நவோத்ர சத சங்காபிஷேகமும், அலங்கார கல்போத்த பிரகார ஸ்ரீ வரலக்ஷ்மி பூஜை, பிரசாதம் வழங்குதல் என்பன நடைபெறும்.

மாலை 4.00 மணிக்கு சாயரட்சைப் பூஜையும், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ வரலக்ஷ்மி அம்பாளுக்கு சதுஷஷ்டி உபசாரப் பூஜை, தீபாராதனை, கன்னிப்பெண்கள், சுமங்கலிகள், தீபப்பூஜை நடைபெற்று அடியார்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அம்பிகையின் திருவருளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!