ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ராயவரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இதில் ராயவரத்தை சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேரின் வடம் பிடித்து இழுத்தனர்,
பொதுமக்களால் இழுக்கப்பட்ட தேரானது கோவிலை சுற்றியுள்ள குளம் கடைவீதி உள்ளிட்ட முக்கிய தெருக்களில் தேர் வீதி உலா வந்தது.
திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு முத்துமாரி அம்மனின் அருள் பெற்று சென்றனர். இந்த தேர்த்திருவிழாவிற்கு காவல்துறையினர் பாதுகாப்பினை அளித்தனர்.
(Visited 16 times, 1 visits today)





