இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் வெளியிட்டுள்ள செய்தி!
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வாகன இறக்குமதியாளர்கள். முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சகம் 500kw வரையிலான மின்சாரம் அல்லது 3000CC வரையிலான பிளக்-இன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனங்களின் (PEHV) இறக்குமதிக்கு CIF மதிப்பின் மீது பூஜ்ஜிய சுங்க வரி விதிக்க அமைச்சரவைக்கு குறிப்பாணையை சமர்ப்பித்துள்ளது.
இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினால், பொருளாதாரம், வெளிநாட்டு நாணய கையிருப்பு மற்றும் தேசிய வருமானம் கடுமையாக பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)