இலங்கை

இந்தியாவின் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் இலங்கையின் ஆள்புல எல்லை பயன்படுத்தப்படாது!

இலங்கையின் நிலம் அல்லது கடல்சார் பிரதேசம் இந்தியாவின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீண்டும் ஒருமுறை உறுதியளித்ததாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைத் தலைவர்களுக்கும் இடையிலான இருதரப்பு ஈடுபாடுகளுக்குப் பிறகு பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த மிஸ்ரி, அத்தகைய உறுதிமொழி இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கையொப்பந்தத்தின்  பின்னணி என்று கூறினார்.

இது ஏற்கனவே இருக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் கட்டமைக்கும் குடை கட்டமைப்பு ஆவணம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்த.

இது உயர் மட்ட பரிமாற்றங்கள், திறன் மேம்பாடு மற்றும் கூட்டுப் பயிற்சிகள் போன்றவற்றை தீவிரப்படுத்தும் என்றும் அவர் கூறினார். இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!