இலங்கை செய்தி

ஜப்பானிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையில் தொழில் சந்தை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து உயர்தொழில்நுட்ப பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கப்படும் இலங்கையில் உயர் தொழில்நுட்ப தொழில்கள் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளுக்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று தெரிவித்தார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து ஆரம்பமான இந்த கலந்துரையாடலில், பல துறைகளில் அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு தரப்பும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இலங்கையில் கடன் மேம்படுத்தல் செயற்பாட்டிற்கு ஜப்பான் அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கு ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடன் உகப்பாக்கம் செயல்முறையின் பொதுவான தளத்தை மேம்படுத்துதல் மற்றும் செயல்முறையை விரைவுபடுத்துதல் ஆகியவற்றின் நோக்கத்திற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் தொடர்பிலும் அங்கு விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், இலகு ரயில் திட்டம், துறைமுக கிழக்கு முனையம், கண்டி அபிவிருத்தித் திட்டம், மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் ஜப்பான்-இலங்கை ஒத்துழைப்பை மேலும் வெளிப்படுத்தும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு போன்ற திட்டங்களை விரைவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரும் பல பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை அமைதியான மற்றும் நிலையான பிராந்தியமாக பேணுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட நட்புறவு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் இருவரது கவனமும் ஈர்க்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

(Visited 28 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை