இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 0.9 சதவீதம் குறைவடைந்து 5.42 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 5.47 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 5,389 மில்லியன் டொலர்களிலிருந்து 5,367 மில்லியன் டொலர்களாக 0.4% குறைந்துள்ளது.
நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





