இலங்கையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று!
புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட உள்ளதாகவும் கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய மக்கள் சக்தியின் தற்போது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும், 15 அமைச்சுக்கள் நான்கு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(Visited 27 times, 1 visits today)





