புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த வருவாய் பாரிய அளவில் அதிகரிப்பு!
2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் மூலம் நாட்டிற்கு கிடைத்த வருமானம் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2024 இல் பெறப்பட்ட 6.575 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும்போது 22.8% அதிகமாகும்.
வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் மொத்தம் 879.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 310,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





