டிரம்ப் விதித்த வரியால் இலங்கையின் ஆடைத் தொழிற்துறை ஆபத்தில்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் அபாயம் ஏறபட்டுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்து உரியத் தீர்வை பெற்று தருவது அவசியமாகும் என சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய வரி காரணமாகத் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க நேரிடும்.
அது தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு உரியப் பதிலை வழங்கும் எனத் தான் நம்புவதாகச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் தெரிவித்துள்ளார்
(Visited 43 times, 1 visits today)