இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் அபாயம்
மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் அல்லது ஸ்தம்பித்துவிடும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் திரு.பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை நூறு டொலர்களாக உயரலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை ஏற்கனவே ஐந்து டொலர்களால் அதிகரித்துள்ளது.
இதன்படி, ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 100 டொலர்களாக உள்ளதாகவும், அடுத்த சில மாதங்களில் இது மேலும் அதிகரிக்கலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் விலை அதிகரிப்பினால் இலங்கையில் பணவீக்க நிலைமை மீண்டும் அதிகரிக்கலாம் எனவும் அதனால் மக்கள் மேலும் அவதிப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறுகிறார்.