இவ் வருடத்துடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிறைவடையும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டில் நிறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாடு ஸ்திரமாக இருந்தாலும், ஆபத்து வலயத்திலிருந்து நாடு முழுமையாக வெளியேறவில்லை. ஆபத்து மண்டலத்திலிருந்து வெளியேற இன்னும் 6, 8 அல்லது 12 மாதங்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டில் சாதகமான பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதற்காக தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களை பேணுவது முக்கியம் எனவும் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)