இலங்கையின் தற்போதைய பிரச்சினைகள் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தீர்க்கப்படும்!
இலங்கையில் ஏற்பட்டுள்ள விசேட வைத்திய மற்றும் மின் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியில் அறிவியல் ரீதியாக தங்களது பிரச்சினைகளை தீர்க்க வல்லவர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொழில்சார் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வைத்தியர்கள் வருகை தந்த போது பொலிஸாரும் இராணுவத்தினரும் கலகத் தடுப்புப் பிரிவுகளை நிலைநிறுத்தியதற்கு வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





