இலங்கையின் தற்போதைய பணவீக்க நிலவரம்!
இலங்கையில் 2024 செப்டம்பரில் -0.2% ஆக பதிவான நாட்டில் பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் -0.7% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
உணவுப் பிரிவில் புள்ளி பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 0.5% ஆக இருந்து 2024 அக்டோபரில் 1.3% ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 2024 செப்டம்பரில் -0.7% ஆக இருந்த உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம், 2024 அக்டோபரில் -2.3% ஆகக் குறைந்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)