இலங்கையின் தற்போதைய பணவீக்க நிலைமை!
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) இன் படி, இலங்கையின் புள்ளி மேற்பரப்பு பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் பதிவான 2.7% இலிருந்து மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 2024 இல் 3.3% ஆக இருந்த உணவு வகையின் வருடாந்திர புள்ளி பணவீக்கம் மே 2024 இல் 0.5% ஆகக் குறைந்துள்ளது.
இதேவேளை, 2024 ஏப்ரலில் 2.3% ஆக பதிவாகியிருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் 2024 மே மாதத்தில் 2.4% ஆக சிறிதளவு அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது.
(Visited 3 times, 1 visits today)