இலங்கை : கொள்ளளவை கடந்து சிறைகளில் அடைக்கப்படும் கைதிகள்!
சிறைச்சாலைகளின் நிர்வாகம் குறித்த செயல்திறன் தணிக்கை அறிக்கை, சிறை அறைகளின் வார்டு கொள்ளளவை மீறுவதாகக் காட்டுகிறது.
அறிக்கையின்படி, கைதிகளின் சதவீதம் 232 சதவீதமாக அதிகரித்துள்ளது. சிறைக்கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவழிப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
27 சிறைச்சாலைகளில் 187 கழிவறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் சிறையில் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 1,795 என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் பல கட்டிடங்கள் இடிந்துள்ளதாக சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெரிசலை நிர்வகிப்பது தொடர்பான செயல்திறன் தணிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.