உலக சாதனைகளில் இணைந்த இலங்கையின் ஆப்பிள் விலை
சந்தையில் விற்கப்படும் விலைகளின்படி, அதிக விலைக்கு ஆப்பிள் விற்பனை செய்யும் நாடாக இலங்கை மாறியுள்ளது.
Numbeo அறிக்கைகளால் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நுகர்வோர் சுட்டெண்ணிற்கமைய, சந்தையில் ஆப்பிள் அதிக விலைக்கு விற்கப்படும் உலகின் இரண்டாவது நாடாக இலங்கை இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிளின் விலை 7.04 அமெரிக்க டொலர்கள் அல்லது 2188 இலங்கை ரூபாவாகும்.
அந்த தரவரிசைப்படி, உலகிலேயே அதிக விலைக்கு ஆப்பிள் விற்கப்படும் நகரமாக நியூயார்க் நகரம் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு கிலோ ஆப்பிளின் விலை 7.05 அமெரிக்க டொலர்களாகும்.
இந்த தரவரிசையில் தென் கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது மற்றும் ஒரு கிலோ ஆப்பிள்களின் விலை 6.91 டொலராகும்ஆகும்.
புதிய தரவரிசையின்படி, அமெரிக்கா உலகின் மிக விலையுயர்ந்த நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் நாட்டில் 7 நகரங்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒரு கிலோ ஆப்பிளின் விலை 2.01 டொலராக உள்ளது.
இது தவிர ஜப்பான், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளின் தலைநகரங்களும் இந்த தரவரிசையில் இடம்பெற்றுள்ளதுடன், ஒரு கிலோ ஆப்பிள் பழத்தின் விலை முறையே 5.13 டொலர், 2.63 மற்றும் 3.93 டொலர்களாக பதிவாகியுள்ளது.