இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையின் 77 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்

77 வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகள் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

“தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்பதே இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் கருப்பொருளாகும்.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில், அதிக பொது மக்களின் பங்கேற்புடன் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக முப்படை வீரர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் அணிவகுப்புக்கு முப்படை கவச வாகனங்களைப் பயன்படுத்தாமலிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://web.facebook.com/share/v/1HDaRkXcWt/

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!