செய்தி

காஸா பகுதியில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

காஸா பகுதியில் 17 இலங்கையர்கள் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது.

அவர்கள் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர்.

இதற்குத் தேவையான பணிகளை எகிப்து தூதரகமும், பாலஸ்தீனத்திலுள்ள பிரதிநிதி அலுவலகமும் செய்து வருகின்றன.அதன்படி அவர்கள் பத்திரமாக எகிப்தை அடையப் போகிறார்கள் என்றார்.

இதேவேளை, காணாமல் போன இலங்கையர் ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தூதுவர் தெரிவித்ததாகவும், அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி