கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள் : புதிதாக புலம்பெயர்பவர்களுக்கு தடை விதிக்கப்படுமா?

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது என அந்நாட்டின் குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் மரணத்திற்கு காரணமான பிரிதொரு இலங்கையர் கைது செய்யப்பட்டார்.
இதனால் கனடா செல்லும் இலங்கையர்களுக்கு ஏதேனும் தடை ஏற்படுத்தப்படுமா என ஊடகமொன்று கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த பிரதானி மேற்படி கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்பட மாட்டாது.
(Visited 12 times, 1 visits today)