ஈரான் தாக்குதலில் இலங்கையர்கள் காயம் : UAE அறிக்கை!
ஈரானுடன் தொடர்புடைய சமீபத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து 03 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
UAE வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தம் 58 பேர் சிறு காயங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, எத்தியோப்பியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ஈரான், இந்தியா, வங்காளதேசம், இலங்கை, அஜர்பைஜான், ஏமன், உகாண்டா, எரித்திரியா, லெபனான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காயமடைந்த 58 பேரில் எத்தனை இலங்கையர்கள் இருந்தனர் என்பதை அறிக்கையில் குறிப்பிடவில்லை அல்லது அவர்களின் அடையாளங்கள் குறித்த எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




