இலங்கை மக்களிடம் விடுக்கப்பட்ட விசேட கோரிக்கை

வெப்பமான காலநிலையில் அதிகளவு திரவங்களை பருகுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவ சபை மக்களுக்கு இதனை அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அதிகளவு சீனி உள்ள இனிப்பு பானங்களை அருந்துவது பொருத்தமானதல்ல என அதன் தலைவர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் அதிக வெப்பநிலைக்கு வெளியே செல்வதனை முடிந்தவரை குறைப்பது மிகவும் அவசியம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 21 times, 1 visits today)