வெளிநாடு ஒன்றில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள இலங்கையர்கள்!
நீண்ட காலமாக விசா இன்றி குவைத்தில் தங்கியிருந்த 31 பேர் இன்று (19.09) நாடு திரும்பியுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-230 விமானம் மூலம் குவைத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்களில் 03 ஆண்களும் 28 பெண்களும் உள்ளடங்குவதுடன். அவர்களில் பெரும்பாலானோர், அனுராதபுரம், குருநாகல், காலி, மாத்தரை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களாவர்.
மேலும் சுமார் 2,000 பேர் இலங்கைக்குத் திரும்புவதற்காக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் எதிர்காலத்தில் குழுக்களாக இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தூதரகப் பேச்சாளர் தெரிவித்தார்.





