இலங்கையரின் மோசமான செயல் – பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
பிரித்தானியாவில் புகலிட விடுதியில் வசித்து வந்த இலங்கையர் ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள ஃபெல்தாமில் (Feltham) யாஷின் ஹிமாசாரா என்ற 20 வயதுடைய இலங்கையர் குறித்த பெண்ணை அடித்து, கழுத்தை நெறித்து துன்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், ஐல்வொர்த் கிரவுன் நீதிமன்றத்தில் (Isleworth Crown Court) காணொளி மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடத்தல், பாலியல் வன்கொடுமை, ஊடுருவல் மற்றும் அடித்து தாக்குதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை ஹிமாசாரா எதிர்கொண்டுள்ளார்.
ஹிமாசாரா ஆங்கிலம் பேச சிரமப்படுவதாகவும், விசாரணையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவி அவருக்கு தேவைப்படும் என்றும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிங்கள மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தனது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திய சந்தேகநபர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
இந்நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி அதுவரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை ஹிமாசாராவின் புகலிட நிலை குறித்து கருத்து தெரிவிக்க உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது.





