இலங்கை செய்தி

சவூதியில் சித்திரவதைக்குள்ளாகி தவிக்கும் இலங்கை பணிப் பெண்கள்

சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தாம், ரியாத்தில் உள்ள வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளானதாக 4 பெண்கள் தெரிவிக்கின்றனர்.

தொலைபேசியில் பதிவான வீடியோக்கள் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களை குறித்த பெண்கள் விவரித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த 4 பெண்கள் 2023 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொழும்பு, பம்பலப்பிட்டி மற்றும் குருநாகல் பகுதிகளில் அமைந்துள்ள முகவர் நிலையங்களில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்காகச் சென்றுள்ளனர்.

இவர்கள் களுத்துறை, பாணந்துறை, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய பகுதிகளில் வசித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பொருளாதார நெருக்கடியால் ஆயிரம் நம்பிக்கையுடன் வெளிநாடு சென்ற அந்த பெண்கள் தற்போது மிகவும் விரும்பத்தகாத அனுபவத்தை எதிர்கொண்டுள்ளனர்.

தாங்கள் வேலை செய்த வீடுகளில் சரியான உணவும், சம்பளமும் கிடைக்காமல் இவர்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.  சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களை தங்க வைக்க வேலைவாய்ப்பு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் தம்மை இலங்கைக்கு அழைத்து வருமாறு அதிகாரிகளிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தங்களைப் போன்று வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட வீட்டுப் பணியாளர்கள் பலர், அந்த குடியிருப்பில் தங்கியுள்ளதாகவும், அவர்களை அதிலிருந்து விடுவிக்குமாறும் அதிகாரிகளிடம் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(Visited 14 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை