இலங்கை

சவுதி அரேபியாவில் மோசமாக நடத்தப்படும் இலங்கை பெண்கள்!

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு புலம்பெயரும் தொழிலாளர்கள் அந்நாடுகளில் சொல்லொனா துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

அந்தவகையில், நுவரெலியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண் ஒருவர் மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்துள்ளார்.

அவருடைய உடலில் ஊசிகள் செலுத்தி சித்திரவதை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். ருத்துவபரிசோதனையின்போது ஐந்து நீளமான ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுவரேலியாமாவட்ட மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது நாள் மிகமோசமான சித்திரவதையின் பின்னர் சிவரஞ்சினி இன்னுமொரு இலங்கையரின் உதவியுடன் அந்த வீட்டிலிருந்து வெளியேறி சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தாயாரான சிவரஞ்சினி வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் ஜூன் 17ம் திகதி சவுதிஅரேபியா சென்றுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் ஒருவாரகாலம் அங்கு வேலைபார்த்தேன் பெரும்கொடுமைகளை அனுபவித்தேன் எனது பிள்ளைக்காக அவற்றை சகித்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கழிவறையை சுத்தம் செய்வதற்காக ஏணியில் ஏறியவேளை நான் கீழேவிழுந்தேன் தலையில் அடிப்பட்டது மயக்கம் வந்தது.

நான் என்னை சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அனுப்பிவிடுங்கள் நான் இலங்கைக்கு செல்கின்றேன் என தெரிவித்தேன் ஆனால் அவர்கள் அதனை ஏற்கமறுத்து என்னை அடித்தார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!