இலங்கை

குவைத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்! வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை

இலங்கைப் பெண் ஒருவர் குவைத்தில் உயிரிழந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவுக்கு அறிவித்துள்ளது.

66 வயதுடைய குலசிங்க ஆராச்சியைச் சேர்ந்த அனுலா பிரிதிமாலி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இலக்கம் 438/1, நுகவத்தை வீதி, கிரிவத்துடுவ என்ற முகவரியில் வசிப்பதாக குடிவரவுத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள நெருங்கிய உறவினரோ அல்லது அவருக்குத் தெரிந்தவர்களோ இருந்தால் விரைவில் தெரிவிக்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி புகைப்படத்தில் உள்ள பெண்ணை யாரேனும் அறிந்தால், அமைச்சின் தொலைபேசி இலக்கம்: 011 -238836/ 011 -7711163/ 011- 2323015, மின்னஞ்சல்: consular@mfa.gov.lk அல்லது தூதரகப் பிரிவு, வெளிவிவகார அமைச்சு, 2 ஆவது மாடி, செலிங்கோ கட்டிடம் கொழும்பு 01. வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.

(Visited 19 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!