அவுஸ்திரேலியாவிற்கு சென்ற இலங்கை பெண்னொருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட கை
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தனது குடும்பத்தை பார்வையிடச் சென்ற இலங்கையின் மூத்த பிரஜை ஒருவருக்கு அரிய சதை உண்ணும் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் நோயை கட்டுப்படுத்த வைத்தியர்கள் அவரது இடது கையை துண்டித்துள்ளனர். .
74 வயதுடைய குறித்த பெண் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நோக்கி இந்த வருட ஆரம்பத்தில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் அங்குள்ள இடங்களுக்கு சுற்றுலா சென்ற நிலையில் புருளி அல்சர் எனப்படும் சதையை உண்ணும் ஒருவகை பக்றீரியா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் அவரது இடது கையில் காணப்பட்ட வீக்கம் காரணமாக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குறித்த நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து நோயை கட்டுப்படுத்துவதற்காக வைத்தியர்கள் அறுவை சிகிச்சை மூலம் குறித்த பெண்ணின் இடது கையை அகற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புருளி அல்சர் (buruli ulcer) எனப்படும் குறித்த நோய் நுளம்புகள் மற்றும் பிற விலங்குகளால் ஏற்படக்கூடியதாகும்.
இது அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் முன்னர் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.