இலங்கை வாகன இறக்குமதி : புதிய விலைகளை அறிவித்தது யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/vehi.jpg)
அரசாங்கம் வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை அமல்படுத்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி, அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தம் புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
தற்போதைய மாற்று விகிதங்கள், அரசாங்க வரிகள் மற்றும் 18% வாட் வரியைத் தவிர்த்து பிற வரிகளை அடிப்படையாகக் கொண்ட விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி மிட்சுபிஷி அட்ரேஜ் ரூ. 11.23 மில்லியனுக்கும், மிட்சுபிஷி எக்ஸ்பாண்டரின் விலை ரூ. 14.99 மில்லியனுக்கும் கிடைக்கும்.
எக்ஸ்பாண்டர் கிராஸ் ரூ. 16.1 மில்லியனுக்கும், அவுட்லேண்டர் ஸ்போர்ட் ரூ. 15.675 மில்லியனிலிருந்து தொடங்கும். எக்லிப்ஸ் கிராஸ் ரூ. 19 மில்லியனாகவும், எல்200 ரூ. 18.135 மில்லியனிலிருந்தும் கிடைக்கும்.
பிரீமியம் மாடலான மிட்சுபிஷி மான்டெரோ ஸ்போர்ட் ரூ. 49.58 மில்லியனாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.