சொல்லிசையில் நெத்தியடி அடிக்கும் இலங்கை இளைஞன் “துவாரகன்”

தினமும் ஒவ்வொரு இலங்கைப் படைப்பாளர்களைப் பற்றி பார்த்து வரும் நாம் இன்றும் ஒரு கலைஞரைப் பற்றி தேடி எடுத்து வந்துள்ளோம்.
அந்த வகையில் இன்று நாம் துவாரகன் ஜெயபாலச்சந்திரன் என்ற சொல்லிசைக் கலைஞனைப் பற்றி பார்ப்போம்.
துவாரகன் ஜெயபாலச்சந்திரன் கொழும்பில் பிறந்து திருகோணமலையை வதிவிடமாகக் கொண்டவர்.
இவர் பரம்பரையாக கலைக்குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் அப்பா “நவகீதா” என்ற ஒரு இசைகச்சேரியை நண்பர்களுடன் சேர்ந்து ஆரம்பித்து நல்லபடியாக தொடர்ந்து நடத்தி வந்தார்.
நல்ல பாடகரும் கூட வீட்டில் இருக்கும் போதும் பாடிக்கொண்டே இருப்பார் தூங்குமட்டும் பாடிக்கொண்டிருப்பார் .
இவருடைய தாத்தாவும் கடவுளுக்காக ஒரே பாடல்களும் பஜனைகளும் பாடிக்கொண்டு சந்தோசமாக இருப்பார்.
துவாரகன் வளர்ந்துவரும் கலைஞராக இருக்கிறார். THUVA JB CHANDRAN என்ற அடையாளப்பெயரில் தனது இசைப்படைப்புகளை முன்னெடுத்து வருகின்றார்.
எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் நண்பர்களின் உதவியுடன் இந்த துறையில் 2018ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து பல சொல்லிசைப்பாடல்களை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார்.
அன்னையர் தினத்தன்று “அம்மா உனக்கு” என்ற பாடலை தமிழிலும், சிங்களத்திலும் எழுதி சொல்லிசை வடிவில் வெளியிட்டு பிரபல்யமடைந்துள்ளார்.
இலங்கை சொல்லிசை கலைஞர்களில் தனக்கு என தனி இடம் கிடைக்கும் வரை போராடுவதையே இலக்காக கொண்டுள்ளார்.