பிரித்தானியாவில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள் : ஐ.நா எச்சரிக்கை
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ்-அமெரிக்க இரகசிய இராணுவத் தளத்தை நடத்தும் தொலைதூரப் பகுதியானது, புலம்பெயர்ந்தோருக்கு நீண்ட காலத்திற்குத் தடுத்து வைக்க “பொருத்தமான இடம் அல்ல” என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறியுள்ளது.
டியாகோ கார்சியாவில் உள்ள தற்காலிக முகாமில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டஜன் கணக்கான இலங்கைத் தமிழர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தப் பிரதேசத்தில் புகலிடக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை.
இதற்கு நீண்ட கால தீர்வை தேடுவதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
(Visited 11 times, 1 visits today)





