ரஷ்யாவில் குடியுரிமை பெற்ற இலங்கை இராணுவத்தினர் : நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்!
ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 465 இலங்கை இராணுவ வீரர்களின் விடுதலையானது சட்டப்பூர்வ சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்காக போராடும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகளின் கோரிக்கைகளுடன் இலங்கையின் கோரிக்கையையும் பின்னர் பரிசீலிக்க ரஷ்ய அதிகாரிகளை தூண்டியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் திரும்ப முற்பட்ட இலங்கையர்கள் சிலர் ரஷ்ய குடியுரிமையை பெற்றுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கலாநிதி சமன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சட்டத்தின்படி, அவர்கள் இரட்டை குடிமக்களாக இருக்க முடியாது. இப்போது, இந்த இலங்கையர்களில் சிலர் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர். அவர்கள் வேறொரு நாட்டுடன் இரட்டைக் குடியுரிமை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் இப்போது ரஷ்ய குடிமக்கள் என்பதால் அவர்களைப் பற்றிய விவரங்களைக் கேட்பதில் எங்களுக்கு வரம்புகள் உள்ளன, ”என்று அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் ரஷ்ய குடியுரிமை பெற்ற ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை ரஷ்யா துல்லியமாக தெரிவிக்கவில்லை.
தவிர, மற்றவர்கள் ராணுவத்தில் சேர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையெழுத்திட்டுள்ளனர், அதில் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே அவர்கள் வெளியேற முடியும் என்று அவர் கூறினார்.
சுமார் 10,000 வெளிநாட்டினர் அங்கு போராடுகிறார்கள். இலங்கைக்கு மட்டும் ரஷ்யா விதிவிலக்கு அளிப்பது கடினம். எனவே, எதிர்காலத்தில் அனைத்து நாடுகளுக்கும் பொதுவான ஒரு முடிவை எடுக்கும்போது இலங்கையின் கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பார்கள், ”என்று அவர் மேலும் கூறினார்.