இலங்கையின் கடற்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்தக் கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அது கூறுகிறது.
மேலும், இது குறித்து மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் வானிலை ஆய்வு மையம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)