இலங்கை ஜனாதிபதி தேர்தல் : வாக்குச் சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பார்வையாளர் உயிரிழப்பு!

இரத்தினபுரி, சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் சமகி ஜன பலவேக (SJB) சார்பில் பார்வையாளராக இருந்த அறுபத்தெட்டு வயதுடைய நபர் ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நெஞ்சுவலி காரணமாக உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவரது சுகயீனம் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 1 visits today)