இலங்கை ஜனாதிபதி தேர்தல் – மஹிந்த கட்சியை விட்டு சென்றவர்களுக்கு கடுமையான நடவடிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகியவர்கள் மீள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
வலுவான இரண்டாவது வரிசை உருவாக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட்டு வெளியேறியவர்களின் பங்கை தற்போது இந்த குழு நிறைவேற்றி வருகிறது.
அத்துடன், கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்படுபவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 22 times, 1 visits today)