இலங்கை ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைப் பிரகடனங்களுக்கு பொதுவான கட்டமைப்பை தயாரிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெஃப்.ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளும் இது தொடர்பான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக பெஃப்.ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் முதன்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களை இலக்கு வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து தற்போது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாடத்தப்பட்டு வருவதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)